அறிமுகம்:
Zimbabwe vs Afghanistan: ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான டி20 தொடர் டிசம்பர் 11, 2024 தேதி இரவு 5:04 pm மணிக்கு நடைபெற்றது இது இந்த இரு அணிக்குமான முதல் டி20 தொடர் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது இந்த இரண்டு அணிகளும் பந்துவீச்சில் பலமான அணி என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது இறுதி ஓவர் வரையும் இந்த ஆட்டம் தொடர்ந்தது இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார் யார் தோல்வி பெறுவார் என்பதை கணிப்பது மிகவும் கடினமாக இருந்தது இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் என்று நினைக்கும் பொழுது அதிர்ஷ்டவசமாக ஜிம்பாப்வே அணி இறுதியில் வெற்றி பெற்றது இப்போது இதில் எந்த அணி முதலில் பேட்டிங் செய்தது எந்த அணி முதலில் பவுலிங் செய்தது என்ற முழு விவரத்தையும் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
ஆப்கானிஸ்தான் பேட்டிங் செயல்திறன்:
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தனக்கு நிர்ணயித்த 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கரீம் ஜனட் 49 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார் அது மட்டுமில்லாமல் 5 பவுண்டரிகளை அடித்து விலாசினார் மற்றும் முஹம்மது நபி 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார் அது மட்டுமில்லாமல் 5 பவுண்டரிகளையும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு ஹஸ்ரத்துல்லா ஜாசாய் 15 பந்துகளில் 20 ரன்களும், அஸ்மத்துல்லா ஓமர்சாய் 12 பந்துகளில் 13 ரன்களும் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் எதுவும் எடுக்கவில்லை.
ஜிம்பாப்வே பவுலிங் செயல்திறன்:
இதில் சிறப்பாக பவுலிங் செய்த எதிர் அணியை சேர்ந்த வீரர்கள் ரிச்சர்ட் ந்கராவா, முசரபானி ஆசீர்வாதம், ட்ரெவர் குவாண்டு, வெலிங்டன் மசகாட்ஸா இவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட்களை வீழ்த்தினார். ரிச்சர்ட் ந்கராவா 4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(ரஹ்மானுல்லா குர்பாஸ், முஹம்மது இஷாக், முஹம்மது நபி) இந்த மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். அதன் பிறகு முசரபானி ஆசீர்வாதம் 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது(ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய்) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார். மற்றும் ட்ரெவர் குவாண்டு 4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(செடிகுல்லா அடல்) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார். வெலிங்டன் மசகாட்ஸா 3 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(அஸ்மத்துல்லா உமர்சாய்) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
ஜிம்பாப்வே பேட்டிங் செயல்திறன்:
அதன் பிறகு களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி வீரர்கள் பிரையன் பென்னட், டியான் மியர்ஸ் மற்றும் தாஷிங்கா முசெக்கிவா இவர்கள் மூவரும் அதிரடியாக விளையாடினார்கள் மற்ற வீரர்கள் சொர்க்க ரன்கள் மட்டும் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக பிரையன் பென்னட் 49 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார் அது மட்டுமில்லாமல் 5 பவுண்டரிகளை அடித்து விலாசினார். டியான் மியர்ஸ் 29 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார் அது மட்டுமில்லாமல் 2 பவுண்டரிகளையும் 1 சிக்ஸர்களையும். தாஷிங்கா முசெக்கிவா 13 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார் அது மட்டுமில்லாமல் 1 பவுண்டரிகளை அடித்து விலாசினார். அதன் பிறகு சிக்கந்தர் ராசா மற்றும் தடிவனாஷே மருமணி இருவரும் தலா 9 ரன்கள் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் பவுலிங் செயல்திறன்:
இதில் சிறப்பாக பவுலிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் நவீன்-உல்-ஹக், ரஷித் கான், முஹம்மது நபி இவர்கள் அனைவரும் எதிர் அணி விக்கெட்களை வீழ்த்தினார். நவீன்-உல்-ஹக் 4 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது(தடிவானாஷே மருமணி, சிக்கந்தர் ராசா, வெஸ்லி மாதவேரே) இந்த 4 விக்கெட்டை வீழ்த்தினார் மற்றும் ரஷித் கான் 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது(பிரையன் பென்னட், ரியான் பர்ல்) இந்த 2 விக்கெட்டை வீழ்த்தினார். முஹம்மது நாபி 2 ஓவர்களில் 13 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது(தயாப் தாஹிர்) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
இறுதி முடிவுகள்:
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டியில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி எவ்வளவோ கடினமாக போராடியும் இறுதியில் தோல்வியை பரிசாக பெற்றது. இது ஜிம்பாப்வே அணிக்கு முதல் வெற்றி ஆகும்.
ஆப்கானிஸ்தான் பேட்டிங் ஹைலைட்ஸ்:
பெயர் | ரன்கள் | பவுலிங் | பவுண்டரிகள் | சிக்ஸர்கள் |
ரஹ்மானுல்லா குர்பாஸ் | 0 | 3 | 0 | 0 |
செடிகுல்லா அடல் | 3 | 5 | 0 | 0 |
ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் | 20 | 15 | 2 | 1 |
முஹம்மது இஷாக் | 1 | 5 | 0 | 0 |
கரீம் ஜனத் | 54 | 49 | 5 | 0 |
அஸ்மத்துல்லா உமர்சாய் | 13 | 12 | 0 | 1 |
முஹம்மது நபி | 44 | 27 | 5 | 1 |
ரஷித் கான் | 2 | 4 | 0 | 0 |
ஆப்கானிஸ்தான் பவுலிங் ஹைலைட்ஸ்:
பெயர் | ஓவர்கள் | ரன்கள் | விக்கெட்கள் |
நவீன்-உல்-ஹக் | 4 | 33 | 3 |
முஜீப் உர் ரஹ்மான் | 4 | 23 | 0 |
அஸ்மத்துல்லா உமர்சாய் | 4 | 34 | 0 |
ரஷித் கான் | 4 | 26 | 2 |
ஃபரீத் அகமது | 2 | 14 | 0 |
முஹம்மது நபி | 2 | 13 | 1 |
ஜிம்பாப்வே பேட்டிங் ஹைலைட்ஸ்:
பெயர் | ரன்கள் | பவுலிங் | பவுண்டரிகள் | சிக்ஸர்கள் |
பிரையன் பென்னட் | 49 | 49 | 5 | 0 |
தடிவானாஷே மருமணி | 9 | 9 | 1 | 0 |
டியான் மியர்ஸ் | 39 | 29 | 2 | 1 |
சிக்கந்தர் ராசா | 9 | 5 | 2 | 0 |
ரியான் பர்ல் | 10 | 7 | 0 | 1 |
வெஸ்லி மாதவேரே | 4 | 7 | 0 | 0 |
தாஷிங்கா முசெக்கிவா | 16 | 13 | 1 | 0 |
வெலிங்டன் மசகாட்ஸா | 6 | 2 | 1 | 0 |
ஜிம்பாப்வே பவுலிங் ஹைலைட்ஸ்:
பெயர் | ஓவர்கள் | ரன்கள் | விக்கெட்கள் |
ரிச்சர்ட் ந்கராவா | 4 | 28 | 3 |
முசரபானி ஆசீர்வாதம் | 4 | 26 | 1 |
பிரையன் பென்னட் | 1 | 12 | 0 |
ட்ரெவர் குவாண்டு | 4 | 35 | 1 |
சிக்கந்தர் ராசா | 4 | 24 | 0 |
வெலிங்டன் மசகாட்ஸா | 3 | 18 | 1 |
Recent Posts: