அறிமுகம்:
Goat திரைப்படம் முழுக்க ஹீரோ மற்றும் வில்லனுக்கு இடையே உள்ள முன் விரோதத்தை காரணமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். ஹீரோ வில்லனின் குடும்பத்தை தெரியாமல் கொன்றுவிடுவார் அதனால் வில்லன் ஹீரோவை பழிவாங்குவதற்காக ஹீரோவின் மகனை கடத்திச் சென்று சித்திரவதை செய்து அதன் பிறகு தன்னுடைய வளர்ப்பு மகனாக வளர்த்து அதன் பிறகு ஹீரோ மகனை வைத்து ஹீரோவை பழி வாங்குவார் வில்லன். இப்பொழுது இந்த goat திரைப்படத்தில் எந்தெந்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் அவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் அவர்களின் வயது என்ன இது எல்லாமே இப்பொழுது பார்க்கலாம்.
Goat படத்தில் எந்த நடிகர் நடிக்கிறார்:
இந்த திரைப்படத்தின் ஹீரோவாக தளபதி விஜய் அவர்களும் வில்லனாக மோகன் அவர்களும் நடித்திருப்பார்கள் ஹீரோணியாக சினேகா அவர்கள் நடித்திருப்பார்கள் மற்றும் ஹீரோவின் நண்பர்களாக டாப் ஸ்டார் பிரசாந்த் அவர்களும் நடனப் புயல் பிரபுதேவா அவர்களும், அஜ்மல் அமீர் அவர்களும் நடித்திருப்பார்கள். அது மட்டும் இல்லாமல் (யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ் ரெட்டி, லைலா, அரவிந்த் ஆகாஷ்) சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். இந்தத் திரைப்படத்தில் திரிஷா அவர்கள் ஒரு பாட்டிற்கு நடனம் ஆடி இருப்பார்கள் இந்தப் படத்தில் திரிஷா அவர்கள் ஆடிய அந்த பாட்டு ரொம்பவும் மக்களை கவர்ந்துள்ளது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் அருமையாக இசையமைத்திருந்தார். இந்தப் படத்துடைய கதை மற்றும் திரைக்கதை எல்லாமே வெங்கட் பிரபு அவர்கள் தான் எழுதி இயக்கினார்.
Goat திரைப்பட நடிகர் சம்பளம்:
Goat திரைப்படத்தில் நடித்த நடிகர்களுடைய சம்பளம் எவ்வளவு தெரியுமா இந்த படத்துடைய ஹீரோவான தளபதி விஜய் அவர்களுக்கு 200 கோடி சம்பளமாக கொடுத்திருக்கிறார்கள் மற்றும் நடிகரும் நடன புயலான பிரபுதேவாவிற்கு இரண்டு கோடி சம்பளமாக கொடுத்திருக்கிறார்கள் அதன் பிறகு நடிகர் பிரசாந்த் அவர்களுக்கு 75 லட்சம் சம்பளமாக கொடுத்திருக்கிறார்கள். மலையாளம் நடிகரான ஜெயராம் அவர்களுக்கு 50 லட்சம் சம்பளமாக கொடுத்திருக்கிறார்கள் மற்றும் இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்த சினேகாவிற்கு 30 லட்சம் சம்பளமாக கொடுத்திருக்கிறார்கள். இந்த சிறைப்படத்தில் மெயின் வில்லனாக நடித்த மோகன் அவர்களுக்கு 40 லட்சம் சம்பளமாக கொடுத்து இருக்கிறார்கள் மற்றும் இந்த திரைப்படத்தை எழுதி இயக்கிய தயாரிப்பாளர் வெங்கட் பிரபுவிற்கு 10 கோடி சம்பளமாக கொடுத்திருக்கிறார்கள்.
Goat திரைப்பட நடிகர்களின் வயது:
Goat திரைப்படத்தில் நடித்த நடிகர் விஜய் அவர்களின் வயது 50 மற்றும் நடிகரும் நடன புயலும் ஆன பிரபுதேவா அவர்களின் வயது 51. நடிகர் விஜய் அவர்களை விட சிறப்பாக நடிக்க கூடிய பிரசாந்த் அவர்களின் வயது 51 இந்தத் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்த சினேகா அவர்களின் வயது 42 மற்றும் இந்த திரைப்படத்தில் தாய் மாமனாக நடித்த வெங்கட் பிரபுவின் அன்புத் தம்பி ஆன பிரேம்ஜியின் வயது 45. தற்பொழுது தமிழ் சினிமாவின் காமெடி நடிகனாக கலக்கிக் கொண்டிருக்கும் யோகி பாபுவின் வயது 39 மற்றும் இந்த திரைப்படத்தில் ஹீரோவின் நண்பனாக நடித்த ajmal ameer வயது 39. இந்தத் திரைப்படத்தில் மெயின் கதாபாத்திரத்தில் நடித்த மலையாள நடிகருமான ஜெயராம் அவர்களின் வயது 58 அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கிய தயாரிப்பாளர் வெங்கட் பிரபுவின் வயது 51.
நடிகர் விஜய் கடைசியாக நடித்த படம்:
நடிகர் விஜய் அவர்களின் goat திரைப்படம் மக்களுக்கிடையில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது ஏனென்றால் நடிகர் விஜய் அவர்கள் இந்தப் படத்திற்குப் பிறகு இன்னும் ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே நடிக்க உள்ளார். நடிகர் விஜய் அவர்களின் 69 ஆவது படம் தான் அவருடைய கடைசி திரைப்படமாக இருக்கும் அதனால் goat திரைப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு தியேட்டரில் டிக்கெட்டை வாங்கினர். படமும் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே அருமையாக இருந்தது படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் அனைத்து திரையரங்குகளும் இந்தப் படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.
தளபதி விஜய் அவர்கள் இதற்கு முன்னாடி leo என்ற திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என்ற எதிர்பார்ப்பில் இறந்த நிலையில் goat திரைப்படத்தில் கிளைமாக்ஸ் இல் இரண்டாம் பாகம் வருவதற்கான அறிகுறியும் வெங்கட் பிரபு அவர்கள் விட்டுச் சென்று இருக்கிறார். இந்த நிலையில் தளபதி அவர்கள் அடுத்து ஒரே ஒரு திரைப்படம் மட்டும் தான் நடிக்க உள்ளார் அந்த திரைப்படத்தை எச் வினோத் அவர்கள் இயக்க உள்ளனர் அந்த திரைப்படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்க உள்ளார் எச் வினோத் அவர்கள் கடைசியாக இரண்டு படங்களை நடிகர் அஜித்குமாரை வைத்து எடுத்தார் அந்த திரைப்படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்த காரணத்தினால் இப்பொழுது தளபதி 69 திரைப்படத்தை எச் வினோத் இயக்குகிறார்.
Goat படத்தின் ஹைலைட்ஸ்:
நடிகர்களின் பெயர் | நடிகர்களின் சம்பளம் | நடிகர்களின் வயது |
தளபதி விஜய் | 200 கோடி | 50 வயது |
பிரபுதேவா | 2 கோடி | 51 வயது |
பிரசாந்த் | 75 லட்சம் | 51 வயது |
ஜெயராம் | 50 லட்சம் | 58 வயது |
சினேகா | 30 லட்சம் | 42 வயது |
அஜ்மல் அமீர் | 50 லட்சம் | 39 வயது |
மோகன் | 40 லட்சம் | 68 வயது |
வெங்கட் பிரபு | 10 கோடி | 51 வயது |
Recent Posts: