Introduction:
West Indies vs England: England மற்றும் West Indies இடையிலான ODI தொடர் அக்டோபர்,31,2024 ஆம் தேதி இரவு 11:30 pm மணிக்கு நடைபெற்றது. இதில் England அணி 209 ரன்கள் எடுத்தது மற்றும் West Indies அணி 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இதற்குக் காரணம் இந்தப் போட்டியில் மழையின் காரணமாக சிறிது நேரம் தள்ளி வைக்கப்பட்டது அதனால் இந்த தொடர் west indiesக்கு சாதகமாக அமைந்தது 50 ஓவர் என்பது குறைக்கப்பட்டது இப்போது இந்த தொடரில் எந்த நபர் அதிக ரன்களை எடுத்தார் எந்த நபர் அதிக விக்கட்களை வீழ்த்தினார் இதைப் பற்றிய முழு விவரத்தையும் இப்போது பார்க்கலாம்.
இங்கிலாந்து பேட்டிங் செயல்திறன்:
முதலில் பேட்டிங் செய்த England அணி தனக்கு நிர்ணயித்த 50 ஓவர்கள் முடிவதற்கு முன்பாகவே அனைத்து விக்கட்களை பறி கொடுத்தது அதாவது 45.1 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது இதில் சிறப்பாக பேட்டிங் செய்த கேப்டன் லியாம் லிவிங்ஸ்டோன், சாம் குரான், ஜேக்கப் பெத்தேல், வில் ஜாக் மற்றும் பில் சால்ட் இந்த 5 வீரர்கள் அதிரடி ஆட்டத்தால் அதிக ரன்களை குவிக்க முடிந்தது இருப்பினும் England அணி தோல்வியை பரிசாக பெற்றது.
கேப்டன் லியாம் லிவிங்ஸ்டோன் 49 பந்துகளில் 48 ரன்கள் அடித்தார் அது மட்டும் இல்லாமல் 3 பௌண்டரிகளையும் 2 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் 56 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 2 பௌண்டரிகளை அடித்து விலாசினார். அதன் பிறகு ஜேக்கப் பெத்தேல் 33 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 3 பௌண்டரிகளை அடித்து விலாசினார் அதன் பிறகு வில் ஜாக் 27 பந்துகளில் 19 ரன்கள் அடித்தார் அது மட்டும் இல்லாமல் 2 பௌண்டரிகளை அடித்து விலாசினார் மற்றும் பில் சால்ட் 29 பந்துகளில் 18 ரன்கள் அடித்தார் அது மட்டும் இல்லாமல் 3 பௌண்டரிகளை அடித்து விலாசினார் மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் எடுக்க வில்லை
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு செயல்திறன்:
இதில் சிறப்பாக பவுலிங் செய்த எதிர் அணியை சேர்ந்த வீரர்கள் குடகேஷ் மோட்டி, மேத்யூ ஃபோர்டே, ஜெய்டன் சீல்ஸ், அல்சாரி ஜோசப் இவர்கள் அனைவரும் England அணியின் விக்கெட்களை வீழ்த்தினர். குடகேஷ் மோட்டி 10 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், டான் மவுஸ்லி, சாம் கர்ரன்) இந்த 4 விக்கெட்களை வீழ்த்தினார். மேத்யூ ஃபோர்டே 9 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(ஜோர்டான் காக்ஸ், ஜேக்கப் பெத்தேல்) இந்த 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஜெய்டன் சீல்ஸ் 8 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது (பில் சால்ட், வில் ஜாக்) இந்த 2 விக்கெட்களை வீழ்த்தினார். அல்சாரி ஜோசப் 8.1 ஓவர்களில் 46 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(அடில் ரஷித், ஜோஃப்ரா ஆர்ச்சர்) இந்த 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செயல்திறன்:
அதன் பிறகு களம் இறங்கிய west indies அணி 25.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக பேட்டிங் செய்த எவின் லூயிஸ், பிராண்டன் கிங், கீசி கார்டி இவர்களின் அதிரடி ஆட்டத்தால் எளிதாக வெற்றி பெற முடிந்தது.
எவின் லூயிஸ் 69 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து குறைந்த பந்தில் அதிக ரன்கள் அடித்தார் அது மட்டும் இல்லாமல் 5 பௌண்டரிகளையும் 8 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு பிராண்டன் கிங் 56 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 3 பௌண்டரிகளை அடித்து விலாசினார் அதன் பிறகு கீசி கார்டி 20 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 2 பௌண்டரிகளை அடித்து விலாசினார்.
இங்கிலாந்து பந்துவீச்சு செயல்திறன்:
இதில் சிறப்பாக பவுலிங் செய்த England அணி வீரர்கள் அடில் ரஷித், லியாம் லிவிங்ஸ்டோன் இவர்கள் இருவரும் எதிர் அணியின் விக்கெட்களை வீழ்த்தினார் மற்ற வீரர்கள் யாரும் விக்கெட்டை வீழ்த்தவில்லை. அடில் ரஷித் 7 ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(எவின் லூயிஸ்) இந்த 1 விக்கெட்களை வீழ்த்தினார் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் 5.5 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(பிராண்டன் கிங்) இந்த 1 விக்கெட்களை வீழ்த்தினார் மற்ற வீரர்கள் பெரிதாக விக்கெட்டை வீழ்த்தவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து ODI இறுதி முடிவுகள்:
England மற்றும் West Indies இடையிலான போட்டியில் England அணியை வீழ்த்தி west indies அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது மற்றும் England அணி 209 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியுற்றது. இதற்குப் பிறகு வரும் போட்டிகளில் England அணி வெற்றி பெருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இங்கிலாந்து பேட்டிங் ஹைலைட்ஸ்:
பெயர் | ரன்கள் | பவுலிங் | பௌண்டரிகள் | சிக்ஸர்கள் |
பில் சால்ட் | 18 | 29 | 3 | 0 |
வில் ஜாக்ஸ் | 19 | 27 | 2 | 0 |
ஜோர்டான் காக்ஸ் | 17 | 31 | 2 | 0 |
ஜேக்கப் பெத்தேல் | 27 | 33 | 3 | 0 |
லியாம் லிவிங்ஸ்டன் | 48 | 49 | 3 | 2 |
சாம் கர்ரன் | 37 | 56 | 2 | 0 |
டான் மௌஸ்லி | 8 | 12 | 0 | 0 |
ஜேமி ஓவர்டன் | 0 | 1 | 0 | 0 |
அடில் ரஷித் | 15 | 19 | 2 | 0 |
ஜோஃப்ரா ஆர்ச்சர் | 7 | 10 | 1 | 0 |
ஜான் டர்னர் | 2 | 5 | 0 | 0 |
இங்கிலாந்து பந்துவீச்சு ஹைலைட்ஸ்:
பெயர் | ஓவர்கள் | ரன்கள் | விக்கெட்கள் |
ஜோஃப்ரா ஆர்ச்சர் | 5 | 21 | 0 |
ஜான் டர்னர் | 5 | 26 | 0 |
அடில் ரஷித் | 7 | 50 | 1 |
சாம் கர்ரன் | 2 | 13 | 0 |
லியாம் லிவிங்ஸ்டன் | 5.5 | 32 | 1 |
ஜேக்கப் பெத்தேல் | 1 | 12 | 0 |
வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் ஹைலைட்ஸ்:
பெயர் | ரன்கள் | பவுலிங் | பௌண்டரிகள் | சிக்ஸர்கள் |
பிராண்டன் கிங் | 30 | 56 | 3 | 0 |
எவின் லூயிஸ் | 94 | 69 | 5 | 8 |
கீசி கார்டி | 19 | 20 | 2 | 0 |
ஷாய் ஹோப் | 6 | 10 | 0 | 0 |
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு ஹைலைட்ஸ்:
பெயர் | ஓவர்கள் | ரன்கள் | விக்கெட்கள் |
மேத்யூ ஃபோர்டே | 9 | 48 | 2 |
ஜெய்டன் சீல்ஸ் | 8 | 22 | 2 |
அல்சாரி ஜோசப் | 8.1 | 46 | 2 |
குடாகேஷ் மோதி | 10 | 41 | 4 |
ரோஸ்டன் சேஸ் | 10 | 47 | 0 |
Recent Posts: