அறிமுகம்:
இந்தப் பதிவில் நவம்பர் 8, 2024 ஆம் தேதி வெளியான வேலைவாய்ப்பு தகவலை பற்றி தான் பார்க்கப் போகிறோம். இப்பொழுது நாம் பார்க்க போகிற நிறுவனத்தின் பெயர் Suspa pneumatics india pvt Ltd இந்த நிறுவனம் இந்தியாவில் இயங்கி வரக்கூடிய மக்கள் அனைவராலும் அறியப்பட்ட ஒரு முன்னணி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் தான் இப்பொழுது வேலைக்கு ஆட்களை எடுக்கிறார்கள். இந்த Suspa pneumatics நிறுவனத்தைப் பொறுத்தவரையில் மாத சம்பளம் மட்டும் இல்லாமல் இன்னும் நிறைய சலுகைகள் வழங்குகிறார்கள். இப்பொழுது இந்த நிறுவனம் எங்கே அமைந்துள்ளது இந்த நிறுவனத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் இந்த நிறுவனத்திற்கு வேலைக்கு செல்ல யாரை தொடர்பு கொள்வது இதைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்.
வேலை நிலை:
Suspa pneumatics நிறுவனத்தில் என்ன பதிவிற்கு இப்பொழுது ஆட்களை எடுக்கிறார்கள் என்றால் Naps apprenticeship trainee பதிவிற்கு தான் இப்பொழுது ஆட்களை எடுக்கிறார்கள் உங்களின் வேலை ஆனது எப்படி இருக்கும் என்றால் machine operator & assembly இதற்கு சம்பந்தமான வேலையாக தான் இருக்கும் அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் வேலை செய்வதற்கு தகுதியான நபர்களை மட்டும் தான் எடுப்பார்கள் அந்த வகையில் suspa pneumatics நிறுவனத்தில் யாரையெல்லாம் எடுக்கிறார்கள் என்றால் ஆண் பெண் இருபாலரையும் எடுப்பதாக அறிவித்துள்ளனர் இப்பொழுது Naps apprenticeship trainee பதிவிற்கு யாரையெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
கல்வி தகுதிகள்:
Suspa pneumatics நிறுவனத்தில் இப்பொழுது என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது diploma and engineering படித்து முடித்த இளைஞர்கள் ஆண் பெண் இருபாலரையும் எடுக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் இந்த நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்வதற்கு அவர்கள் அறிவித்திருக்கும் அந்த வருடத்திற்குள் நீங்கள் உங்களுடைய படிப்பை முடித்திருக்க வேண்டும். இவர்கள் எந்த வருடம் படித்து முடித்தவர்களை கேட்டிருக்கிறார்கள் என்றால் 2019 முதல் 2023க்குள் படித்து முடித்தவர்கள் மட்டும் கேட்டிருக்கிறார்கள் நீங்கள் 2024 இல் படித்து முடித்து இருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. இப்பொழுது இந்த Suspa pneumatics நிறுவனத்தின் எவ்வளவு காலி பணியிடங்களை அறிவித்திருக்கிறார்கள் என்றால் 20க்கு மேற்பட்ட பணியிடங்களை அறிவித்துள்ளனர்.
சம்பளம்:
நாம் எந்த நிறுவனத்திற்கு சென்றாலும் வேலை செய்வதற்கு முக்கிய காரணம் சம்பளம் அந்த வகையில் இந்த நிறுவனத்தில் மாத வருமானமாக எவ்வளவு கொடுக்கிறார்கள் என்றால் diploma படித்த இளைஞர்களுக்கு சம்பளமாக ₹14200 ரூபாய் கொடுக்கிறார்கள் மற்றும் engineering படித்த இளைஞர்களுக்கு ₹15200 ரூபாய் மாத வருமானமாக கொடுக்கிறார்கள் இந்த வருமானம் ஆனது என்னதான் குறைவாக இருந்தாலும் இவர்கள் சொல்லும் நேரத்தை விட நீங்க அதிக நேரம் வேலை பார்த்தால் கூடுதல் ஊதியம் வழங்குகிறார்கள் அது மட்டும் இல்லாமல் இந்த நிறுவனத்தின் இன்னும் நிறைய வித்தியாசமான சலுகைகள் வழங்குகிறார்கள் அது என்ன என்பதை பற்றி இப்பொழுது முழுவதுமாக பார்க்கலாம்.
சலுகைகள்:
Suspa pneumatics நிறுவனத்தில் என்ன மாதிரியான சலுகைகள் கொடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது நீங்கள் வேலை செய்யும் நேரங்களில் மூன்று வேளையும் உணவு இலவசமாக இந்த நிறுவனத்தில் இருந்து கொடுக்கிறார்கள் இதற்கு நீங்கள் காசு கொடுக்க தேவையில்லை அது மட்டும் இல்லாமல் இந்த நிறுவனத்தை சுற்றி உள்ள பகுதிகளில் இலவசமாக பேருந்து வசதிகளை அமைத்துக் கொடுக்கிறார்கள் இப்பொழுது எந்தெந்த இடங்களில் பேருந்து வசதிகள் கொடுக்கிறார்கள் என்பதைப் பற்றி பார்க்கலாம் (கிண்டி, பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, எஸ்பி கோவில், எம்எம் நகர், பொத்தேரி, திருவான்மியூர், தரமணி, தொரைப்பாக்கம்). இந்தப் பகுதிகளுக்கு மட்டும் பேருந்து வசதி கொடுக்கிறார்கள் அது இல்லாமல் வேற என்ன சலுகைகள் இந்த நிறுவனத்தில் இருந்து கொடுக்கிறார்கள் என்றால் நீங்கள் அணிவதற்கு இலவசமாக ஆடைகளையும் மற்றும் கால்களில் அடிபடாமல் இருப்பதற்கு காலணிகளையும் கொடுக்கிறார்கள்.
வேலை நேரம்:
Suspa pneumatics நிறுவனத்தில் வேலை செய்யும் நேரத்தை பொருத்தவரையில் நீங்கள் சுழற்சி முறையில் தான் வேலை செய்ய வேண்டும் மொத்தம் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை 1sd shift (8am to 4pm), 2nd shift (4pm to 12am), 3rd shift (12am to 8am). இந்த மூன்று சுழற்சி முறையில் தான் வேலை இருக்கும். எட்டு மணி நேரத்திற்கு அதிகமாக வேலை செய்தால் அதற்கு தனி ஊதியம் வழங்கப்படும் ஒரு சில நிறுவனங்களில் நீங்கள் வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும் ஒரு நாட்கள் மட்டுமே விடுமுறை இருக்கும் ஆனால் suspa pneumatics நிறுவனத்தில் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே வேலை இருக்கும் சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் உங்களுக்கு எப்பொழுதும் விடுமுறையாக இருக்கும்.
வேலை இடம் மற்றும் தொலைபேசி எண்:
இந்த நிறுவனம் இப்பொழுது எங்கே அமைந்துள்ளது என்பதை பார்க்கும் பொழுது கூடுவாஞ்சேரி இந்த இடத்தில் தான் இந்த நிறுவனம் தற்பொழுது அமைந்துள்ளது இந்த நிறுவனத்தைப் பற்றி உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு நேரில் செல்லுங்கள். விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் மட்டும் இந்த வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் விருப்பம் இல்லாத நபர்கள் எங்களின் நேரங்களை வீணடிக்க வேண்டாம் இந்த வேலை வாய்ப்பு முற்றிலும் இலவசமானது.
தொலைபேசி எண் – 8925099399 (விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் மட்டும் இந்த வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்)
Job Highlights:
Content: | Job Details: |
நிறுவனத்தின் பெயர் | Suspa pneumatics india pvt Ltd |
வேலை நிலை | Naps apprenticeship trainee |
கல்வி தகுதிகள் | Diploma & Engineering |
சம்பளம் | ₹14200 to ₹15200 மாத வருமானம் |
வேலை நேரம் | சுழற்சி முறையில் வேலை (3) |
சலுகைகள் | உணவு, போக்குவரத்து, OT, சீருடை மற்றும் காலணிகள் |
வேலை இடம் | கூடுவாஞ்சேரி |
தொலைபேசி எண் | 8925099399 |
Recent Posts: