jobs
Trending

South Africa vs Pakistan T20 Match

South Africa vs Pakistan T20 Match highlights

அறிமுகம்:

South Africa vs Pakistan இடையிலான டி20 தொடர் டிசம்பர் 10, 2024 தேதி இரவு 9:30 pm மணிக்கு நடைபெற்றது இது இந்த இரு அணிக்குமான முதல் டி20 தொடர் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் இந்த இரண்டு அணிகளும் பலமான அணி என்பதால் எந்த அணி வெற்றி பெறும் எந்த அணி தோல்வி பெறும் என்று அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது இப்போது இதில் எந்த அணி முதலில் பேட்டிங் செய்தது எந்த அணி முதலில் பவுலிங் செய்தது என்ற முழு விவரத்தையும் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

தென்னாப்பிரிக்கா பேட்டிங் செயல்திறன்:

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி தனக்கு நிர்ணயித்த 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 40 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார் அது மட்டுமில்லாமல் 4 பவுண்டரிகளையும் 8 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். மற்றும் ஜார்ஜ் லிண்டே 24 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார் அது மட்டுமில்லாமல் 3 பவுண்டரிகளையும் 4 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு ஹென்ரிச் கிளாசென் 13 பந்துகளில் 12 ரன்களும், குவேனா மபகா 11 பந்துகளில் 12 ரன்களும் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் எதுவும் எடுக்கவில்லை.

பாகிஸ்தான் பவுலிங் செயல்திறன்:

இதில் சிறப்பாக பவுலிங் செய்த எதிர் அணியை சேர்ந்த வீரர்கள் ஷஹீன் அஃப்ராடி, அப்ரார் அகமது, அப்பாஸ் அப்ரிடி, சுபியான் முகீம் இவர்கள் அனைவரும் தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட்களை வீழ்த்தினார். ஷஹீன் அஃப்ராடி 4 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(ராஸி வான் டெர் டஸ்ஸன், டேவிட் மில்லர், நகாபயோம்சி பீட்டர்) இந்த மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். அதன் பிறகு அப்ரார் அகமது 4 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(ரீசா ஹென்ட்ரிக்ஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஆண்டிலே சிமெலேன்) இந்த மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். அதன் பிறகு அப்பாஸ் அப்ரிடி 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது (ஹென்ரிச் கிளாசென், டொனோவன் ஃபெரீரா) இந்த 2 விக்கெட்டை வீழ்த்தினார். மற்றும் சுபியான் முகீம் 4 ஓவர்களில் 53 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(ஜார்ஜ் லிண்டே) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

பாகிஸ்தான் பேட்டிங் செயல்திறன்:

அதன் பிறகு களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது. இதில் சிறப்பாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வீரர்கள் முகமது ரிஸ்வான், சைம் அயூப் மற்றும் தயப் தாஹிர் இவர்கள் மூவரும் அதிரடியாக விளையாடினார்கள் மற்ற வீரர்கள் சொர்க்க ரன்கள் மட்டும் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 62 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார் அது மட்டுமில்லாமல் 5 பவுண்டரிகளையும் 3 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். சைம் அயூப் 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார் அது மட்டுமில்லாமல் 7 பவுண்டரிகளை அடித்து விலாசினார். தயப் தாஹிர் 18 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார் அது மட்டுமில்லாமல் 1 பவுண்டரிகளையும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு ஷஹீன் அஃப்ராடி மற்றும் உஸ்மான் கான் இருவரும் தலா 9 ரன்கள் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா பவுலிங் செயல்திறன்:

இதில் சிறப்பாக பவுலிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் ஜார்ஜ் லிண்டே, குவேனா மபகா, ஒட்னீல் பார்ட்மேன், ஆண்டிலே சிமெலேன் இவர்கள் அனைவரும் எதிர் அணி விக்கெட்களை வீழ்த்தினார். ஜார்ஜ் லிண்டே, 4 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது(உஸ்மான் கான், ஷாஹீன் அப்ரிடி, இர்பான் கான், அப்பாஸ் அப்ரிடி) இந்த 4 விக்கெட்டை வீழ்த்தினார் மற்றும் குவேனா மபகா 4 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது(முகமது ரிஸ்வான், பாபர் ஆசம்) இந்த 2 விக்கெட்டை வீழ்த்தினார். ஒட்னீல் பார்ட்மேன் 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது(தயப் தாஹிர்) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார் மற்றும் ஆண்டிலே சிமெலேன் 4 ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது(சைம் அயூப்) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

SA vs PAK இறுதி முடிவுகள்:

தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி எவ்வளவோ கடினமாக போராடியும் 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை பரிசாக பெற்றது. இது தென்னாப்பிரிக்கா அணிக்கு முதல் வெற்றி ஆகும்.

தென்னாப்பிரிக்கா பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பவுலிங்பௌண்டரிகள்சிக்ஸர்கள்
ரீசா ஹென்ட்ரிக்ஸ்8910
ராஸி வான் டெர் டஸ்ஸன்0100
மேத்யூ பிரீட்ஸ்கே8501
டேவிட் மில்லர்824048
ஹென்ரிச் கிளாசென்121301
டோனோவன் ஃபெரேரா7600
ஜார்ஜ் லிண்டே482434
ஆண்டிலே சிமெலேன்1400
நகாபயோம்சி பீட்டர்3700
குவேனா மபகா121120

பாகிஸ்தான் பவுலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கெட்கள்
ஷஹீன் அஃப்ராடி4223
அப்ரார் அகமது4373
அப்பாஸ் அப்ரிடி4302
சுபியான் முகீம்4531

பாகிஸ்தான் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பவுலிங்பௌண்டரிகள்சிக்ஸர்கள்
முஹம்மது ரிஸ்வான்746253
பாபர் அசாம்0400
சைம் அயூப்311570
உஸ்மான் கான்9810
தயப் தாஹிர்181811
ஷஹீன் அப்ரிடி9610
இர்பான் கான்1200
அப்பாஸ் அப்ரிடி0100
ஹரிஸ் ரவூப்2300
சுபியான் முகீம்5300

தென்னாப்பிரிக்கா பவுலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கெட்கள்
குவேனா மபகா4392
ஆண்டிலே சிமெலேன்4261
ஒட்னீல் பார்ட்மேன்4441
நகாபயோம்சி பீட்டர்4290
ஜார்ஜ் லிண்டே4214

Recent Posts:

Rane Madras job vacancy

Suspa Pneumatics job vacancy

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button