Is there animal fat in Tirupati laddu?
What kind of ingredients are mixed in the laddus
அறிமுகம்:
Tirupati Laddu: திருப்பதியில் இரண்டு விஷயங்களுக்கு ரொம்பவே பிரபலமானது ஒன்று திருப்பதி ஏழுமலையான் மற்றொன்று திருப்பதி லட்டு. இப்பொழுது திருப்பதி லட்டுவில் கலப்படம் செய்து உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று லட்டுவை ஆய்வு செய்த பொழுது அதில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்திருப்பதாக கூறப்படுகிறது.
திருப்பதி லட்டு பிரச்சினை முக்கிய காரணம்:
ஆந்திரா மற்றும் கர்நாடகா அரசியலில் பெரும் சர்ச்சைக்குள்ளாகிய ஒன்றாக இது பார்க்கப்படுகிறது காரணம் தற்போதைய ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சர் N சந்திரபாபு நாயுடு அவர்கள் அளித்துள்ள தகவல் தான் காரணம் அதில் கூறப்பட்டுள்ளது முன்னாள் ஆந்திர அரசு ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானம் லட்டுவில் கலப்படம் செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார் அதன் பெயரில் குஜராத்தில் செயல்பட்டு வரும் CALF( Centre for Analysis and learning in Livestock & Food) என்று நிறுவனத்தின் ஆய்வுக்கூடத்திற்கு ஜூலை 9, 2024 அன்று பரிசோதனைக்காக லட்டு தயாரிக்க பயன்படும் நெய் அனுப்பப்பட்டது.
அந்த நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை ஜூலை 16, 2024 அன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள செய்தி அந்த நெய்யில் மீன் எண்ணெய் மற்றும் மாட்டின் கொழுப்பு விலங்குகளின் கொழுப்பு மற்றும் சில எண்ணை வகைகள் கலந்திருப்பதாக அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது. இந்த அறிக்கை ஆந்திரா மற்றும் கர்நாடக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது இந்த செய்தி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. லட்டு தயாரிக்க தேவைப்படும் பொருட்களை இணையதள ஒப்பந்ததாரர்கள் மூலம் வாங்கப்படுகிறது இதில் நெய் வாங்கப்பட்டதாக கூறப்படும் நிறுவனம் A.R.Dairy Food private limited, இந்த நிறுவனமானது 1995இல் பால் மற்றும் பால் தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்ய தொடங்கப்பட்டது.
எத்தனை ஆண்டுகளாக திருப்பதி லட்டு வழங்குகிறார்கள்?
திருப்பதி கோவிலில் கடந்த 300 வருடமாக இலவசமாக பக்தர்களுக்காக லட்டு கொடுக்கிறார்கள் அதாவது 1715 ஆம் ஆண்டு முதன் முதலில் பக்தர்களுக்காக திருப்பதி கோவிலில் இலவசமாக லட்டு கொடுக்கப்பட்டது. இப்பொழுது ஒரு நாளைக்கு 3 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள் பண்டிகை நாட்களில் அதிகபட்சமாக ஒரு நாளுக்கு 4 லட்சம் லட்டுகள் கொடுக்கப்படுகிறது. இந்த லட்டை ஆண் பெண் இரு பாலரும் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம் திருப்பதியில் கொடுக்கும் லட்டுக்கு இணையாக இந்தியாவில் வேற எந்த ஒரு லட்டும் கிடையாது இந்தியா முழுக்க இந்த லட்டை வாங்குவதற்கு மக்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இது இல்லாமல் ஆன்லைனில் லட்டுகளை ஆர்டர் செய்கிறார்கள்.
லட்டுகளில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகின்றன?
இந்த Tirupati Laddu அனைவரும் வாங்குவதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கும்போது இந்த லட்டில் பருப்பு மாவு (பெசன்), நெய், சர்க்கரை, உலர் பழங்கள் மற்றும் ஏலக்காய் ஆகியவை சேர்க்கப்படுகிறது. மூன்று வகையான லட்டுகள் திருப்பதி தேவஸ்தானம் மூலம் வழங்கப்படுகிறது. தரிசனம் முடித்து வரும் பக்தர்களுக்கு 40 கிராம் அளவிலான லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதன் பிறகு 175 கிராம் அளவிலான லட்டு 50 ரூபாய்க்கும், மற்றும் 750 கிராம் அளவிலான பெரிய லட்டு 200 ரூபாய்க்கும் தேவஸ்தான மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த லட்டுக்களை மக்கள் ரொம்ப நேரம் வரிசையில் நின்று வாங்கி செல்கிறார்கள்.
திருப்பதி லட்டு தொழிலாளி விவரம்:
ஒப்பந்த ஊழியர்கள் மூலம் Tirupati Laddu தயார் செய்யப்படுகிறது. கிட்டதட்ட 600 நபர்கள் சுழற்சி முறையில் பணி புரிவதாக கூறப்பட்டுள்ளது இவர்களுக்கு மாத வருமானமாக 21,000 வழங்கப்படுகிறது. லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடும் பொழுது சுத்தமாக இருக்க வேண்டும் என்பதால் வேலை செய்யும் தொழிலாளர்கள் மொட்டை அடித்துக் கொண்டும் வேட்டி உடுத்திக் கொண்டும் வேலை செய்வதாக கூறப்படுகிறது.
FAQ
What is the Tirupati laddu controversy?
ஆந்திரா மற்றும் கர்நாடகா அரசியலில் இது பெரும் சர்ச்சையாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் ஆந்திர பிரதேசத்தின் தற்போதைய முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, முன்னாள் ஆந்திர அரசு ஆட்சியின் போது திருப்பதி தேவஸ்தானம் லட்டுவில் கலப்படம் செய்யப்பட்டதாக கூறிய தகவல். லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யைச் சோதிப்பதற்காக, ஜூலை 9, 2024 அன்று நிறுவனத்தின் ஆய்வகத்திற்கு உணவு அனுப்பப்பட்டது.
What was found in Tirupati laddu?
இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனம் லட்டுவை சோதனை செய்தபோது அதில் மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றி இறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்திருப்பதாக கூறப்படுகிறது.
Recent Posts:
• what is the Goat movie about?