India Vs Bangladesh 3rd T20 Match Highlights
India vs Bangladesh 3rd T20 Match Highlights
அறிமுகம்:
India Vs Bangladesh: இந்தியா மற்றும் பங்களாதேஷ்க்கு இடையிலான மூன்றாவது டி20 தொடர் ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கம், ஹைதராபாத்தில் அக்டோபர் 12, 2024 ஆம் தேதி இரவு ஏழு மணிக்கு நடைபெற்றது. இதில் இந்திய அணி உலக சாதனையை படைத்தது அது மட்டும் இல்லாமல் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் உலக சாதனை படைத்தார் கௌதம் கம்பீர் team coach ஆன பிறகு இந்திய அணி எடுக்கும் முதல் அதிகபட்ச ரன்கள் இதுவே ஆகும். இதைப் பற்றிய முழு விவரத்தையும் இப்போது பார்க்கலாம்.
இந்தியா பேட்டிங் செயல்திறன்:
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனக்கு நிர்ணயித்த 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தது இதுவரையில் இன்டர்நேஷனல் டி20 தொடரில் எந்த ஒரு நாடும் 297 ரன்கள் அடித்தது கிடையாது இதுவே முதல் முறையாகும் அது மட்டும் இல்லாமல் இந்திய அணியின் அதிகபட்ச ரன்கள் இதுவாகும் இதில் சிறப்பாக பேட்டிங் செய்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் ரியான் பராக் இந்த நான்கு வீரர்கள் அதிரடி ஆட்டத்தால் அதிக ரன்களை குவிக்க முடிந்தது.
சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து குறைந்த பந்தில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் மற்றும் வரலாற்று உலக சாதனையையும் படைத்தார் அது மட்டும் இல்லாமல் 11 பௌண்டரிகளையும் ஆறு சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 8 பௌண்டரிகளையும் 5 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 47 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 4 பௌண்டரிகளையும் 4 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். மற்றும் ரியான் பராக் 13 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 1 பௌண்டரிகளையும் 4 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார்.
பங்களாதேஷ் பவுலிங் செயல்திறன்:
இதில் சிறப்பாக பவுலிங் செய்த எதிர் அணியை சேர்ந்த வீரர்கள் தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன் சாகிப், முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் மஹ்முதுல்லா இவர்கள் அனைவரும் India அணியின் விக்கெட்களை வீழ்த்தினார். தன்சிம் ஹசன் சாகிப் 4 ஓவர்களில் 66 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி) இந்த மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். தஸ்கின் அகமது 4 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(ரியான் பராக்) இந்த 1 விக்கெட்களை வீழ்த்தினார். முஸ்தாபிசுர் ரஹ்மான் 4 ஓவர்களில் 52 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(சஞ்சு சாம்சன் ) இந்த 1 விக்கெட்களை வீழ்த்தினார். மஹ்முதுல்லா 2 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(சூர்யகுமார் யாதவ்) இந்த 1 விக்கெட்களை வீழ்த்தினார்.
பங்களாதேஷ் பேட்டிங் செயல்திறன்:
அதன் பிறகு களம் இறங்கிய Bangaladesh அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து போராடி தோல்வியுற்றது . இதில் சிறப்பாக பேட்டிங் செய்த Bangladesh அணி வீரர்கள் டவ்ஹித் ஹிரிடோய், லிட்டன் தாஸ் இந்த இரண்டு வீரர்களும் ரன்கள் வருவதற்கு காரணமாக இருந்தார்கள் மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரண்களை எடுக்கவில்லை இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கட்டை பறிகொடுத்தனர் இதன் காரணமாகவே இவர்கள் இந்த தொடரில் தோல்வியை தழுவினார்கள்.
டவ்ஹித் ஹிரிடோய் 42 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 5 பௌண்டரிகளையும் 3 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் மற்றும் லிட்டன் தாஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 8 பௌண்டரிகளை அடித்து விலாசினார் மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் எதுவும் எடுக்கவில்லை.
இந்திய அணியின் பவுலிங் செயல்திறன்:
இதில் சிறப்பாக பவுலிங் செய்த India அணி வீரர்கள் ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி இவர்கள் அனைவரும் எதிர் அணியின் விக்கெட்களை வீழ்த்தினார். ரவி பிஷ்னோய் 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் தாஸ், ரிஷாத் ஹொசைன்) இந்த மூன்று விக்கெட்களை வீழ்த்தினார் மற்றும் மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(முஹம்மது பர்வேஸ் ஹொசைன், மஹ்முதுல்லா ) இந்த 2 விக்கெட்களை வீழ்த்தினார் அதன் பிறகு வாஷிங்டன் சுந்தர் 1 ஓவர்களில் 4 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது (தன்சித் ஹசன் ) இந்த 1 விக்கெட்களை வீழ்த்தினார் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி 3 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(மகேதி ஹசன்) இந்த 1 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்தியா Vs பங்களாதேஷ் இறுதி முடிவுகள்:
India மற்றும் Bangladesh இடையிலான இறுதிப் போட்டியில் Bangladesh அணியை வீழ்த்தி இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது Bangladesh அணி 167 மட்டும் எடுத்து தோல்வியுற்றது. இது India அணியின் மூன்றாவது வெற்றியாகும் Bangladesh அணி மூன்று போட்டிகளிலும் போராடி தோல்வியை பரிசாக பெற்றது. இதற்கு முன்பு நடந்த டெஸ்ட் தொடரிலும் India அணியே வெற்றி பெற்றது அதிலும் Bangladesh அணி எவ்வளவோ போராடியும் வெற்றி பெற முடியவில்லை 2024 அக்டோபர் மாதம் Bangladesh அணிக்கு ஒரு கருப்பு நாளாகவே அமைந்து விட்டது எந்தத் தொடரையும் அவர்களால் கைப்பற்ற முடியவில்லை.
இந்தியா பேட்டிங் ஹைலைட்ஸ்:
பெயர் | ரன்கள் | பவுலிங் | பௌண்டரிகள் | சிக்ஸர்கள் |
சஞ்சு சாம்சன் | 111 | 47 | 11 | 8 |
அபிஷேக் சர்மா | 4 | 4 | 1 | 0 |
சூர்யா குமார் யாதவ் | 75 | 35 | 8 | 5 |
ரியான் பராக் | 34 | 13 | 1 | 4 |
ஹர்திக் பாண்டியா | 47 | 18 | 4 | 4 |
ரிங்கு சிங் | 8 | 4 | 0 | 1 |
நிதீஷ் குமார் ரெட்டி | 0 | 1 | 0 | 0 |
வாஷிங்டன் சுந்தர் | 1 | 1 | 0 | 0 |
இந்தியா பவுலிங் ஹைலைட்ஸ்:
பெயர் | ஓவர்கள் | ரன்கள் | விக்கெட்கள் |
மயங்க் யாதவ் | 4 | 32 | 2 |
ஹர்திக் பாண்டியா | 3 | 32 | 0 |
வாஷிங்டன் சுந்தர் | 1 | 4 | 1 |
நிதீஷ் குமார் ரெட்டி | 3 | 31 | 1 |
ரவி பிஷ்னோய் | 4 | 30 | 3 |
வருண் சகராவார்த்தி | 4 | 23 | 0 |
அபிஷேக் சர்மா | 1 | 8 | 0 |
பங்களாதேஷ் பேட்டிங் ஹைலைட்ஸ்:
பெயர் | ரன்கள் | பவுலிங் | பௌண்டரிகள் | சிக்ஸர்கள் |
முஹம்மது பர்வேஸ் ஹொசைன் | 0 | 1 | 0 | 0 |
டான்சிட் ஹசன் | 15 | 12 | 3 | 0 |
நஜ்முல் ஹொசைன் சாந்தோ | 14 | 11 | 1 | 1 |
லிட்டன் தாஸ் | 42 | 25 | 8 | 0 |
டோவ் ஹிரிடோய் | 63 | 42 | 5 | 3 |
மஹ்முதுல்லா | 8 | 9 | 1 | 0 |
மெஹாடி ஹசன் | 3 | 9 | 0 | 0 |
ரிஷத் ஹொசைன் | 0 | 4 | 0 | 0 |
டான்சிம் ஹசன் சாகிப் | 8 | 8 | 1 | 0 |
பங்களாதேஷ் பவுலிங் ஹைலைட்ஸ்:
பெயர் | ஓவர்கள் | ரன்கள் | விக்கெட்கள் |
மெஹாடி ஹசன் | 4 | 45 | 0 |
டாஸ்கின் அகமது | 4 | 51 | 1 |
டான்சிம் ஹசன் சாகிப் | 4 | 66 | 3 |
முஸ்தாபிசுர் ரஹ்மான் | 4 | 52 | 1 |
ரிஷத் ஹொசைன் | 2 | 46 | 0 |
மஹ்முதுல்லா | 2 | 26 | 1 |
Recent Posts: