அறிமுகம்:
இந்தப் பதிவில் நவம்பர் 30, 2024 ஆம் தேதி வெளியான வேலைவாய்ப்பு தகவலை பற்றி தான் முழுவதுமாக பார்க்க போகிறோம் இப்ப நம்ம பார்க்க இருக்கும் நிறுவனத்தின் பெயர் Prochant இந்த நிறுவனமானது இந்தியாவில் இயங்கி வரக்கூடிய மக்கள் அனைவராலும் அறியப்பட்ட ஒரு மிகப்பெரிய MNC நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது இந்த நிறுவனம் ஆனது எங்கே அமைந்துள்ளது இந்த நிறுவனத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை பற்றி இப்பொழுது தெளிவாக பார்க்கலாம்.
வேலை நிலை:
இந்த Prochant நிறுவனத்தில் என்ன பதவிருக்கு ஆட்களை எடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது AR Caller பதவிருக்கு தான் இப்பொழுது ஆட்களை எடுக்கிறார்கள். இந்த வேலைக்கு அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் யார் வேணாலும் தாராளமாக விண்ணப்பிக்கலாம் அனுபவம் இல்லை என்றால் இவர்கள் உங்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் அது மட்டும் இல்லாமல் Prochant நிறுவனத்தில் இப்பொழுது எவ்வளவு காலி பணியிடங்களை அறிவித்திருக்கிறார்கள் என்றால் 80க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளனர் இந்த 80 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஆண் மற்றும் பெண் இருபாலரையும் எடுப்பதாக அறிவித்துள்ளனர்.
கல்வி தகுதிகள்:
இந்த Prochant நிறுவனத்தில் இப்பொழுது என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் பொழுது Any Degree படித்த இளைஞர்கள் யார் வேணாலும் தாராளமாக விண்ணப்பிக்கலாம் இந்த வேலைக்கு எந்த வருடம் படித்து முடித்தவர்களை எடுக்கிறார்கள் என்றால் 2019 முதல் 2023 வரை படித்து முடித்தவர்கள் இந்த வேலைக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம் அதுமட்டுமில்லாமல் நீங்கள் 2024 ஆம் ஆண்டு படித்து முடித்து இருந்தாலும் தாராளமாக இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் ஒருவேளை நீங்கள் 2018க்கு முன் படித்து முடித்தவர்களாக இருந்தால் இந்த வேலைக்கு இப்பொழுது விண்ணப்பிக்க வேண்டாம்.
சம்பளம்:
இந்த Prochant நிறுவனத்தில் ஒரு வருடத்திற்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்றால் 1,50,000 முதல் 2,00,000 வரை சம்பளமாக கொடுக்கிறார்கள் ஒரு மாதத்திற்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது ₹12,500 முதல் ₹16,500 வரை மாத வருமானமாக கொடுக்கிறார்கள். வேலை இல்லாத நபர்கள் இந்த வேலை வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த நிறுவனத்தில் என்ன மாதிரியான சலுகைகள் கொடுக்கிறார்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.
நிறுவனத்தின் சலுகைகள்:
இந்த Prochant நிறுவனத்தில் சம்பளத்தை தவிர வேறு என்ன சலுகைகள் கொடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது வேலை செய்யும் நேரத்தில் இலவசமாக உணவு கொடுக்கிறார்கள் அது இல்லாமல் நிறுவனத்தை சுற்றி உள்ள பகுதிகளுக்கு வாகன வசதியும் கொடுக்கிறார்கள் இந்த வாகன வசதியை பொருத்தவரைக்கும் பெண்களுக்கு மட்டும்தான் இலவசமாக கொடுக்கிறார்கள் ஆண்களுக்கு வாகன வசதி இந்த நிறுவனத்தில் இருந்து கொடுக்கவில்லை நீங்கள் உங்கள் சொந்த செலவில் தான் நிறுவனத்திற்கு வந்து செல்ல வேண்டும்.
வேலை நேரம்:
இந்த Prochant நிறுவனத்தில் வேலை செய்யும் நேரத்தை பொருத்தவரையில் இரவு 6:30 pm முதல் அதிகாலை 3:30 am வரை உங்களுக்கு வேலை செய்யும் நேரமாக இருக்கும் இந்த நிறுவனத்தில் Night Shift மட்டும்தான் வேலை இருக்கும் General Shift வேலை இருக்காது எப்பொழுதும் நீங்கள் இரவில் தான் வேலை செய்கிற மாதிரி இருக்கும் அது மட்டும் இல்லாமல் இந்த நிறுவனத்தில் வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டும் நீங்கள் வேலை செய்தால் போதும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை நாட்களாக தான் இருக்கும் அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை வேலை நேரமாக இருக்கும் அது மட்டும் இல்லாமல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எப்பொழுதும் விடுமுறையாக தான் இருக்கும்.
நிறுவனத்தின் முகவரி:
இப்பொழுது Prochant நிறுவனம் எங்கே அமைந்துள்ளது என்பதை பற்றி பார்க்கலாம். பிளாக் 6வது மற்றும் 7வது தளம், 1/124, டிஎல்எஃப் ஐடி பார்க், மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிவாஜி கார்டன், மணப்பாக்கம், சென்னை, தமிழ்நாடு – 600089. இந்த இடத்தில் தான் இந்த நிறுவனம் அமைந்துள்ளது இந்த வேலை வாய்ப்பு பிடித்திருக்கிறது இந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது யாரை தொடர்பு கொள்வது என்பதை பார்க்கும் பொழுது இதற்கான தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அந்த எண்ணிற்கு கால் செய்து உங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு இந்த நிறுவனத்திற்கும் நேரில் செல்லுங்கள்.
தொலைபேசி எண் – 7639717886
விருப்பமும் தகுதி உள்ள நபர்கள் மட்டும் இந்த வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்படி இல்லை என்றால் வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள். இந்தப் பதிவை பார்த்து வேலை தேடும் உங்களிடம் யாராவது பணம் கேட்டால் ஒரு ரூபாய் கூட கொடுக்காதீர்கள் இது எங்களின் பணிவான வேண்டுகோள்.
வேலை சிறப்பம்சங்கள்:
Content: | Job Details: |
நிறுவனத்தின் பெயர் | Prochant |
வேலை நிலை | AR caller |
கல்வி தகுதிகள் | Any Degree |
சம்பளம் | ₹12,500 T ₹16,500 |
அனுபவம் | அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் (0 To 1) |
பாலினம் | ஆண் மற்றும் பெண் இருபாலரும் |
படித்து முடித்த ஆண்டு | 2019 To 2023 |
காலி பணியிடங்கள் | 80+காலி பணியிடங்கள் |
வேலை நேரம் | 6:30 pm To 3:30 am |
வேலை இடம் | DLF, சென்னை. |
தொலைபேசி எண் | 7639717886 |
Recent Posts: