jobs
Trending

Royal Enfield Jobs|Royal Enfield Jobs uk|Royal Enfield Job Salary

Royal Enfield Company job vacancy in Chennai

அறிமுகம்:

இந்தப் பதிவில் Royal Enfield நிறுவனத்தில் இருக்கக்கூடிய அற்புதமான வேலைவாய்ப்பு தகவலை பற்றி தான் பார்க்கப் போகிறோம் இந்த நிறுவனமானது இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் பிரபலமான முன்னணி நிறுவனமாக உள்ளது. இவர்கள் தயாரிக்கும் வாகனமானது இந்தியா முழுக்க பிரபலமாக உள்ளது இந்த வாகனம் அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த இரு சக்கர வாகனத்தை வாங்க வேண்டும் என்பது இந்தியாவில் நிறைய பேருடைய ஆசையாகவும் கனவாகவும் உள்ளது. இந்த பதிவை பார்க்கும் நீங்க கூட இந்த இரு சக்கர வாகனத்தை வாங்க வேண்டும் என்று கண்டிப்பாக நினைத்து இருப்பீர்கள். இப்பொழுது இந்த நிறுவனத்தில் என்ன படித்தவர்களை இருக்கிறார்கள் எவ்வளவு மாதம் வருமானம் கொடுக்கிறார்கள் இந்த நிறுவனம் இப்பொழுது எங்கே அமைந்துள்ளது இதைப் பற்றி பார்க்கலாம்.

வேலை நிலை:

Royal Enfield நிறுவனத்தில் இப்பொழுது என்ன பதவிக்கு ஆட்களை எடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது Naps trainee and Boat trainee பதவிருக்கு ஆட்களை எடுக்கிறார்கள் இந்த நிறுவனத்தில் வேலை கிடைப்பது மிகவும் கடினம் கிடைத்த வேலையை தவற விடாதீர்கள் இந்த நிறுவனத்தில் உங்களுக்கு சுழற்சி முறையில் வேலை இருக்கும் இது நிரந்தர வேலை கிடையாது ஒருவேளை நீங்கள் நன்றாக வேலை செய்யும் பட்சத்தில் இந்த நிறுவனத்தில் நிரந்தர வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு நிறைய உள்ளது இப்பொழுது இந்த நிறுவனத்தில் எப்பொழுது நேர்காணல் நடைபெறுகிறது என்பதை பார்க்கலாம்.

கல்வி தகுதி:

இந்த நிறுவனத்தில் இப்பொழுது என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் பொழுது ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்களை மட்டும்தான் இப்பொழுது வேலைக்கு எடுக்கிறார்கள். இன்ஜினியரிங் மற்றும் டிகிரி படித்த இளைஞர்கள் இந்த வேலைக்கு இப்பொழுது விண்ணப்பிக்க வேண்டாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எப்பொழுது படித்து முடித்திருக்க வேண்டும் என்பதை பார்க்கும் பொழுது 2022,2023,2024 ஆம் ஆண்டு படித்து முடித்திருக்க வேண்டும் 2022 இருக்கு முன்னாடி படித்து முடித்த இளைஞர்கள் இந்த வேலைக்கு தயவு செய்து விண்ணப்பிக்க வேண்டாம் நீங்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் இல்லை.

நேர்காணல் தகவல்கள்:

ஒரு சில நிறுவனங்களை பொறுத்தவரையில் காண்ட்ராக்டில் வேலை செய்வதற்கு ஆட்களை எடுப்பார்கள் அந்த வேலைக்கு யார் வேணாலும் விண்ணப்பிக்கலாம். ஆனால் Royal Enfield நிறுவனத்தைப் பொறுத்தவரையில் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் ஆட்களை எடுக்கிறார்கள். இப்பொழுது எந்தத் தேதியில் உங்களுக்கு நேர்காணல் நடைபெறும் என்பதைப் பற்றி பார்க்கலாம் அக்டோபர் 21,2024 முதல் அக்டோபர் 28,2024 தேதி வரையில் உங்களுக்கு நேர்காணல் நடைபெறும் நேர்காணல் செல்லும் நபர்கள் உங்களுடைய கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, பான்கார்டு, அப்டேட் ரெஸ்யூம், வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இவை அனைத்தும் கொண்டு வர வேண்டும் அது இல்லாமல் நேர்காணலுக்கு செல்லும் நம்பர்கள் formal dress மற்றும் shoe போட்டுக் கொண்டு வரவும்.

சம்பளம்:

இந்த நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்வதற்கு முதல் மாத வருமானமாக ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு ₹18500 கொடுக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் ஒரு வருடம் முடிந்த பிறகு உங்களுக்கு மாத வருமானமாக ₹19500 கொடுக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் 12 மாதம் முடிந்த பிறகு ₹12,000 அட்டனன்ஸ் போனஸ் ஆக கொடுக்கிறார்கள் இந்த வேலைக்கு விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் மட்டும் உடனடியாக நேர்காணலுக்கு வரவும். இப்பொழுது இந்த நிறுவனத்தில் என்ன மாதிரியான சலுகைகள் கொடுக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

சலுகைகள்:

ஒரு சில நிறுவனங்களில் வேலை செய்வதற்கு உணவு மற்றும் வாகன வசதி கொடுப்பார்கள் இன்னும் ஒரு சில நிறுவனங்களில் தங்குவதற்கு இடமும் கொடுப்பார்கள் ஆனால் Royal Enfield நிறுவனத்தைப் பொறுத்தவரையில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தில் உணவு இலவசமாக கொடுக்கிறார்கள் மற்றும் இந்த நிறுவனத்தை சுற்றி உள்ள பகுதிகளுக்கு பேருந்து வசதியும் கொடுக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் உங்க கால்களில் அடிபடாமல் இருப்பதற்கு பாதுகாப்பு காலணிகள் கொடுக்கிறார்கள் மற்றும் மருத்துவ காப்பீடு கொடுக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் நீங்கள் அணிவதற்கு சீருடை கொடுக்கிறார்கள்.

நிறுவனம் அமைந்துள்ள இடம்:


Royal Enfield நிறுவனம் இப்பொழுது எங்கே அமைந்துள்ளது நேர்காணலுக்கு நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என்பதை பார்க்கும் பொழுது (A unit of Eicher motor limited), A-19/1, Sipcot industrial growth centre, oragadam, kanchipuram – 602105. இந்த இடத்தில் தான் தற்பொழுது Royal Enfield நிறுவனம் அமைந்துள்ளது இந்த  இடத்தில் தான் நேர்காணல் நடைபெறுகிறது இது நேர்முகத் தேர்வு என்பதனால் இவர்கள் தொலைபேசி எண் இதுவும் கொடுக்கவில்லை மேலே கொடுத்திருக்கும் தகவல்கள் அனைத்தையும் சரியாக படித்துவிட்டு அதன் பிறகு நேர்காணலுக்கு நீங்கள் செல்லுங்கள்.

வேலை சிறப்பம்சங்கள்:

Content:Job Details:
நிறுவனத்தின் பெயர்Royal Enfield
வேலை நிலைNaps trainee and Boat trainee
கல்வி தகுதிஐடிஐ மற்றும் டிப்ளமோ
சம்பளம்முதல் வருடம் ₹18500, இரண்டாவது வருடம் (₹19500)
நேர்காணல் தேதிஅக்டோபர் 21, 2024 முதல் அக்டோபர் 28, 2024 வரை
சலுகைகள்உணவு வாகன வசதி, சீருடைகள், காலணிகள், மற்றும் மருத்துவ காப்பீடு
Job Location ஒரகடம், காஞ்சிபுரம்.

Recent Posts:

Women’s T20 World Cup Final Highlights

Matrimony job vacancy

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button