அறிமுகம்:
Group 4: தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் தேர்வு தான் குரூப் 4 இந்தத் தேர்வுக்கு தகுதியானவர்கள் யார் என்று பார்க்கும் பொழுது தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் யாரு வேணாலும் விண்ணப்பிக்கலாம் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் அனைவருமே இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மேலும் எவ்வளவு மதிப்பெண்களுக்கு நாம் தேர்வு எழுத வேண்டும் என்ன மாதிரியான பதவிகள் இருக்கின்றன இது பற்றிய முழு தகவல்களையும் இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
குரூப் 4 தேர்வு பாடத்திட்டம்:
இந்த தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும் அதில் தமிழிலிருந்து 100 வினாக்களும் கணித பாடத்திட்டத்தில் இருந்து 25 வினாக்களும் பொது அறிவு பாடத்திட்டத்தில் இருந்து 75 வினாக்களும் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் என்ற விகிதத்தில் 300 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். இதில் தமிழ் கட்டாய மொழிதேர்வாக கணக்கில் கொள்ளப்படுகிறது. தமிழ் பாடத்திட்டத்தில் இருந்து வரும் கேள்விகளில் இருந்து 40 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களின் வினாத்தாள்கள் சரிபார்க்கப்படுகிறது.
கட்டாய தமிழ் மொழி தேர்வுக்கான பாடத்திட்டம்:
தமிழிலிருந்து மொத்தம் 100 வினாக்கள் கேட்கப்படுகிறது அதை மூன்று பகுதிகளாக பிரித்து வைத்துள்ளனர் பகுதி அ இலக்கணம் பற்றிய கேள்விகள் இடம்பெறுகிறது பகுதி ஆ இலக்கியம் தொடர்பான கேள்விகள் இடம்பெறுகிறது மற்றும் பகுதி இ உரைநடை பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறுகின்றன.
குரூப் 4 கணித பாடத்திட்டம்:
கணிதத்தில் இருந்து 25 வினாக்கள் கேட்கப்படுகிறது. இந்த கேள்விகள் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள கணித பாடத்திட்டத்தில் குறிப்பிட்ட சில தலைப்பின் கீழ் உள்ள பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவை சராசரி சுருக்குக lcm மற்றும் hcf விகிதம் மற்றும் விகிதாச்சாரம் வேலை மற்றும் நாட்கள் லாபம் மற்றும் நஷ்டம் சதவிகிதம் அளவியல் reasoning பகுதி நிகழ்தகவு சார்ந்த பகடை கணக்குகள் ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.
குழு 4 GK பாடத்திட்டம்:
பொது அறிவை பொருத்தவரையில் 9 அளவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன அதில் முதல் அலகு அறிவியல் சார்ந்த பகுதியாகும். அலகு இரண்டு நடப்பு நிகழ்வுகள் சார்ந்த கேள்விகளும், அலகு மூன்று புவியியல் சார்ந்த கேள்விகளும் அலகு நான்கு வரலாறு தொடர்பான கேள்விகளும் கேட்கப்படுகின்றன. அலகு ஐந்து அரசியல் அறிவியல் தொடர்பான கேள்விகள் இடம்பெறுகின்றன. அலகு 6 பொருளியல் தொடர்பான கேள்விகளும் அலகு ஏழு இந்திய தேசிய இயக்கம் தொடர்பான கேள்விகளும் அலகு எட்டு அகழாய்வுகள் சங்க இலக்கியங்கள் திருக்குறள் ஆங்கிலேயர்களுக்கு எதிரான தொடக்க கால புரட்சிகள் சமூக சீர்திருத்த இயக்கங்கள் இந்திய விடுதலையின் பொழுது தமிழக மகளிர் பங்கு இது தொடர்பான கேள்விகள் அலகு எட்டில் இடம்பெறுகின்றன. அலகு ஒன்பதில் மனித வள மேம்பாட்டு குறியீடு சமூக நீதி தமிழகத்தின் பொருளாதார கேள்விகள் கேட்கப்படுகின்றன.
குரூப் 4 வேலை நிலை:
VAO,டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட், ஜூனியர் அசிஸ்டன்ட் போன்ற பதவிகள் இடம்பெறுகின்றன இந்தப் பதவிகளில் விருப்பம் உள்ள நபர்கள் மட்டும் குரூப் 4 தேர்வுக்கு முயற்சி செய்யுங்கள்.
குரூப் 4 தேர்வுக்கான தகுதிகள்:
குறைந்தபட்ச கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் 18 வயது நிரம்பியவர்கள் இந்த தேர்வுக்கு தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர்
தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு இந்த தேர்வில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகிறது.
குரூப் 4 தேர்வு முறை:
தேர்வு முடிந்தபின் வெளியிடப்படும் அதிகபட்ச கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் மேலும் தமிழ்நாட்டில் தற்பொழுது நடைமுறையில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி தேர்வர்களுக்கு பதவிகள் ஒதுக்கப்படுகின்றன.
குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி:
குரூப் 4 தேர்வில் வெற்றி பெற செய்ய வேண்டிய நடவடிக்கைகள். முதலில் நீங்கள் ஒரு அட்டவணையை தயாரிக்க வேண்டும் அதில் அடுத்த ஆறு மாதத்திற்கு என்ன படிக்கப் போகிறீர்கள் என்பதை குறித்து வைக்க வேண்டும். குறைந்தது ஆறு மாத காலம் முழுமையாக பாடத்திட்டத்தினை முடித்திருக்க வேண்டும். படித்து முடித்த பிறகு கண்டிப்பாக test batch இணைந்து test practice செய்ய வேண்டும். தொடர்ந்து பாடத்திட்டத்தினை revision செய்வதன் மூலம் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமல்லாமல் முந்தைய ஆண்டு வினா தொகுப்பினை பயிற்சி செய்ய வேண்டும். கணித பாடத்திட்டத்தினை பொருத்தவரையில் தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.
Recent Posts:
• what is the Goat movie about?
• what is the highest salary in mnc?