Danfoss Industries: இந்தப் பதிவில் danfoss நிறுவனத்தில் இருக்கக்கூடிய ஒரு அற்புதமான வேலைவாய்ப்பு தகவலை பற்றி தான் முழுவதுமாக பார்க்க போகிறோம்.இந்த நிறுவனத்தில் இப்பொழுது ₹18000 சம்பளத்தில் வேலைக்கு ஆட்களை எடுக்கிறார்கள் இதைப் பற்றிய முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்:
இப்ப நம்ம பாக்க போற நிறுவனத்தின் பெயர் Danfoss industries Ltd இந்த நிறுவனத்தில் என்ன பொருட்களை தயாரிக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது power solution, cooling system, heating system and drives இந்த மாதிரியான பொருட்களின் தயாரிக்கிறார்கள்.
பாலினம்:
எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் வேலை செய்வதற்கு தகுதியான நபர்களை மட்டும் தான் எடுப்பார்கள் அந்த வகையில் இந்த நிறுவனத்தில் ஆண் பெண் இரு பாலரும் தகுதியானவர்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். அதனால் இந்த வேலைக்கு திருமணமான மற்றும் திருமண ஆகாத ஆண் பெண் இருபாலரும் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
ஒரு சில நிறுவனங்களில் வேலை செய்வதற்கு வயதுவரம்பு நிர்ணயித்திருப்பார்கள் அந்த வகையில் இந்த நிறுவனத்தில் 18 வயதிலிருந்து 24 வயதுக்கு உள்ளவர்கள் மட்டும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்குமாறு சொல்லி இருக்கிறார்கள். 24 வயதுக்கு மேல் உள்ள இளைஞர்கள் யாரும் இந்த வேலைக்கு இப்பொழுது விண்ணப்பிக்க வேண்டாம்.
கல்வி தகுதிகள்:
எந்த நிறுவனமாக இருந்தாலும் வேலை செய்வதற்கு கட்டாயம் கல்வி தகுதியை எதிர்பார்ப்பார்கள் அந்த வகையில் இந்த நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்த இளைஞர்கள் மட்டும்தான் இப்பொழுது எடுக்கிறார்கள். அதில் என்ன படித்திருக்க வேண்டும் என்பதை பார்க்கும் பொழுது (mechanical, EEE, ECE, automobile) படித்த இளைஞர்களை மட்டும் தான் இப்போதைக்கு எடுக்கிறார்கள். இந்த வேலைக்கு பத்தாவது மற்றும் 12வது படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
சம்பளம்:
எந்த நிறுவனமாக இருந்தாலும் வேலை செய்வதற்கு ஏற்ப நல்ல சம்பளத்தை கொடுப்பார்கள் இந்த நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் BE படித்த இளைஞர்களுக்கு மாத வருமானமாக ₹18000 கொடுக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் அவர்கள் சொல்லும் நேரத்தை விட அதிகமாக வேலை செய்பவர்களுக்கு கூடுதலாக சம்பளம் கொடுக்கிறார்கள்.
Danfoss நிறுவனத்தைப் பொறுத்தவரை 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு படித்து முடித்தவர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள் 2023 க்கு முன்னாடி முடித்த இளைஞர்கள் யாரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.
சலுகைகள்:
எந்த நிறுவனத்தில் நம் வேலைக்கு சென்றாலும் அந்த நிறுவனத்தில் மாத சம்பளத்தை தவிர வேறு ஏதேனும் சலுகைகள் வழங்குவார்கள் அந்த வகையில் danfoss நிறுவனத்தில் உணவு, வாகன வசதி மற்றும் நாம் அணிவதற்கு சீருடைகளை இந்த நிறுவனத்தில் இருந்து கொடுக்கிறார்கள். உணவைப் பொறுத்த வரைக்கும் நீங்க வேலை செய்யும் அந்த நேரத்தில் மட்டும் உங்களுக்கு உணவுகளை இலவசமாக கொடுக்கிறார்கள். பேருந்து வசதியை பொறுத்தவரையில் இந்த நிறுவனத்தை சுற்றியுள்ள பகுதிக்கு மட்டும் இவர்கள் பேருந்து வசதியை இலவசமாக கொடுக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த நிறுவனத்தில் நம் வேலை செய்வதற்கு சீருடைகளும் எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக கொடுக்கிறார்கள்.
வேலை நேரம்:
ஒரு சில நிறுவனங்களில் நீங்கள் எட்டு மணி நேரம் வேலை செய்வதற்கு மாத சம்பளம் கொடுப்பார்கள் இன்னும் ஒரு சில நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை செய்வதற்கு மாத சம்பளம் கொடுப்பார்கள் danfoss Industries நிறுவனத்தைப் பொறுத்தவரையில் ஒரு நாளைக்கு நீங்கள் எட்டு மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு மேலே வேலை செய்தால் அதற்கு தனியாக ஊதியம் வழங்கப்படும்.
காலி பணியிடங்கள்:
இந்த Danfoss Industries நிறுவனத்தில் இப்பொழுது 100க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த நூறு இடங்களை நிரப்புவதற்கு டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்த ஆண் பெண் இருபாலரையும் விண்ணப்பிக்குமாறு கூறியிருக்கிறார்கள். Danfoss நிறுவனத்தில் நேர்காணலுக்கு செல்ல வேண்டிய தேதியை கீழே கொடுத்திருக்கிறோம் மறக்காமல் அந்த தேதியில் நேர்காணலுக்கு செல்லுங்கள். 17,09,2024 முதல் 30.09,2024 வரை நேர்காணல் நடைபெறும் இந்த வேலை பிடித்திருந்தால் நேர்காணலுக்கு செல்லுங்கள் இல்லையென்றால் வேலை தேடுபவர்களுக்கு பகிருங்கள்.
வேலை இடம்:
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அந்த இடத்திற்கு நீங்கள் செல்லவும்.
Plot No. A-19/2, Danfoss Industries Pvt Ltd, Oragadam Industrial Growth Centre, Oragadam Industrial Corridor, Kanchipuram, Tamil Nadu 602105. இந்த இடத்தில் தான் இப்பொழுது நேர்காணல் நடைபெறுகிறது.
தொடர்பு விவரங்கள்:
இந்த வேலை வாய்ப்பு பற்றி உங்களுக்கே வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு கால் செய்து உங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் மட்டும் கால் செய்யுங்கள் மற்றவர்கள் உங்களின் நேரங்களில் வீணடிக்காதீர்கள் நன்றி.
தொலைபேசி எண்: 8807551228, 7305201143.
இந்தப் பதிவில் பார்த்த வேலைவாய்ப்பு தகவல் முற்றிலும் இலவசம் இந்த வேலைக்கு நீங்கள் எங்கேயும் ஒரு ரூபா கூட கொடுக்க தேவையில்லை யாராவது இந்த வேலை வாய்ப்புக்கு பணம் கேட்டால் காசு கொடுக்காதீர்கள் இது எங்களின் பணிவான வேண்டுகோள் இந்த வேலை வாய்ப்பு தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் இல்லை என்றால் வேலை தேடும் உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Danfoss Industries வேலை சிறப்பம்சங்கள்:
Content: | Job Details |
நிறுவனத்தின் பெயர் | Danfoss Industries |
பாலினம் | ஆண் பெண் இருபாலரும் |
கல்வி தகுதி | டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் |
வயது வரம்பு | 18 வயது முதல் 24 வயது வரை |
சம்பளம் | 18,000 மாத வருமானம் |
சலுகைகள் | உணவு, வாகன வசதி, சீருடைகள் மற்றும் காலணிகள் |
வேலை நேரம் | எட்டு மணி நேரம் சுழற்சி முறையில் வேலை |
காலி பணியிடங்கள் | 100 +காலி பணியிடங்கள் |
நிறுவனம் அமைந்துள்ள இடம் | ஒரகடம், சென்னை. |
கல்வி முடித்த ஆண்டு | 2023,2024 |
நேர்காணல் தேதி | 18.09.2024 to 30.09.2024 |
தொலைபேசி எண் | 8807551228, 7305201143 |
Recent Posts: